2022ஆம் ஆண்டிற்கான உலக இணைய மாநாடு நிறைவு
2022-11-11 19:10:21

2022ஆம் ஆண்டிற்கான உலக இணைய மாநாடு நவம்பர் 11ஆம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இம்மாநாட்டின் போது 20 கிளை கருத்தரங்குகள் நடைபெற்றன. 120 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 2100க்கும் மேற்பட்ட விருந்தனர்களின் எண்ணிக்கை இம்மாநாட்டின் வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இம்மாநாட்டில், எண்முறை ஒத்துழைப்பு, எண்ணியல் பொருளாதாரம், இணையப் பரவல் மற்றும் அமைதி வளர்ச்சி உள்ளிட்ட கருப்பொருட்களிலான விவாதங்கள் நடத்தப்பட்டு, பல ஒத்த கருத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இணைய வெளி பொது சமூகத்தை கூட்டாக கட்டியமைப்பது, உலகளாவிய எண்முறை வளர்ச்சிப் பாதையை உருவாக்குவது ஆகிய முன்னெடுப்புகளுக்கு பல்வேறு தரப்புகளின் பாராட்டு மற்றும் மறுமொழி கிடைத்துள்ளன.