காலநிலை ஏற்புக்கு சீனாவின் நெடுநோக்கு மற்றும் நடவடிக்கை
2022-11-11 18:24:11

காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா. கட்டுக்கோட்பு ஒப்பந்தத் தரப்புகளின் 27ஆவது மாநாட்டின்போது, சீனாவின் காட்சியிடத்தில் நவம்பர் 10ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்தில், காலநிலை ஏற்புக்கு சீனாவின் நெடுநோக்கு மற்றும் நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைக்கான சீனப் பிரதிநிதிக் குழுத் தலைவரும், சீன சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான சாவ் யிங்மின் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில், காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் தணித்தலுக்கும் ஏற்புக்கும் சீனா ஒரேமாதிரி முக்கியத்துவம் அளித்து வருகிறது. உள்நாட்டில் காலநிலை மாற்றத்துக்குப் பொருந்தும் பணியை முன்னேற்றுவதோடு, இது தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பையும் சீனா ஆக்கமுடன் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும், வளர்ந்த நாடுகள் தங்கள் பொறுப்பு மற்றும் கடமையை ஏற்றுக் கொண்டு, காலநிலை ஏற்பு நடவடிக்கையில் வளரும் நாடுகளுக்கான நிதியுதவியை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.