பகிரப்பட்ட எதிர்காலத்தில் இறக்குமதிப் பொருட்காட்சியின் புதிய சாதனை
2022-11-11 09:56:54

5ஆவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் எதிர்பார்க்கப்படக் கூடிய பரிவர்த்தனைகள், கடந்த ஆண்டை விட 3.9 விழுக்காடு அதிகரித்து, 7352 கோடி அமெரிக்க டாலராகப் பதிவாகியுள்ளது. 10ஆம் நாள் வியாழக்கிழமை நிறைவு பெற்ற இந்த இறக்குமதிப் பொருட்காட்சியில் குறிப்பிடத்தக்க சாதனை படைக்கப்பட்டது. டிகாத்லான்  குழுமத்தின் சீன நிறுவனத்தின் துணைத் தலைவர்  பாஸ்கல் பிஸார்ட் கூறுகையில்

அடுத்த 50 ஆண்டுகளில், டிகாத்லான்  நிறுவனத்திற்கு சீனா உலகின் முக்கிய வளர்ச்சி மையங்களில் ஒன்றாக தொடர்ந்து இருக்கும் என்பதில் ஐயமில்லை என்று குறிப்பிட்டார்.

மொத்தம் 2800க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் இந்த வணிக கண்காட்சியில் கலந்து கொண்டு, 438 வகையான புதிய தயாரிப்புகள், தொழில்நுட்பம் மற்றும் சேவை ஆகியவற்றை பொது மக்களுக்கு முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளன.

பகிர்வு என்பது, மேலதிக வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் பெரிய சந்தை, உலகளவில் மிகவும் அரிதானது. குறிப்பாக, பல்வேறு நாடுகள் மற்றும் தரப்புகளுடன் இணைந்து, பெரிய சந்தை, அமைப்புமுறை ரீதியிலான திறப்பு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய மூன்று  வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதாக சீனா தெரிவித்துள்ளது. இந்நிலையில், சீனாவின் வளர்ச்சியில் இருந்து மேலதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகின்றோம்.

2022ஆம் ஆண்டு ஆர்.சி.ஈ.பி எனும் பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தம் அமலுக்கு வருவதன் முதல் ஆண்டு ஆகும். ஆர்.சி.ஈ.பி உறுப்பு நாடுகளான ஜப்பான், கம்போடியா, ஆஸ்திரேலியா, நடப்புப் பொருட்காட்சியில் காட்சி வைக்கப்பட்டுள்ள தனிச்சிறப்புமிக்க பொருட்களில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. ஆர்.சி.ஈ.பி உறுப்பு நாடுகளின் 93விழுக்காடு நிறுவனங்கள் சீனாவுடனான வர்த்தக அளவை அதிகரிக்கப்போவதை எதிர்பார்ப்பதாக எச்எஸ்பிசி வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.