சீனாவில் வியாபாரம் செய்து வரும் ஜோர்டன் வணிகர்
2022-11-11 17:07:49

வணிக வாய்ப்புகளைத் தேடிப் பார்க்கும் விதம், ஜோர்டானைச் சேர்ந்த முகமது நாசர், பல்கலைக்கழகக் காலத்தில் பகுதி நேரப் பணி மூலம் சம்பாதித்த வருவாயை எடுத்து, சீனாவின் ச்சேச்சியாங் மாநிலத்தின் யீ வூ நகருக்கு வந்தார். உலகளவில் மிகப் பெரிய மொத்த விற்பனை சந்தை என்றழைக்கப்பட்ட யீ வூ நகரில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக வாய்ப்புகளை அவர் கண்டுள்ளார். உள்ளூர் சந்தை மற்றும் சரக்கு போக்குவரத்து சேவையின் மூலம் அவர் யீ வூ நகரிலிருந்து உலகின் பல்வேறு இடங்களுக்கு பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.