சீன-சிங்கபூர் தலைமை அமைச்சர்களின் சந்திப்பு
2022-11-11 20:09:06

சீன தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் புனோம் பென்னில் சிங்கபூர் தலைமை அமைச்சர் லி சியென்லுங்குடன் சந்திப்பு நடத்தினார்.

சீனா-சிங்கபூர் இடையே தொடர்ந்து விரிவாகி வரும் ஒத்துழைப்புகள் நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளன. சிங்கபூர் உள்ளிட்ட ஆசியான் நாடுகளுடன் இணைந்து, பிராந்திய பொருளாதார ஒருமைப்பாட்டை முன்னேற்றி, சீன-ஆசியான் உறவு வளர்ச்சியை வலுப்படுத்த சீனா  விரும்புகின்றது என்று லீ கெச்சியாங் தெரிவித்தார்.

புதிய நிலைமையில் சீனாவுடன் இணைந்து இரு நாட்டு ஒத்துழைப்பு மேடைகளின் மூலம் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை ஆழமாக்க சிங்கபூர் விரும்புகின்றது என்று லி சியென்லுங் தெரிவித்தார்.