தியேன் ச்சோ சரக்கு விண்கலம் ஏவுதல் வெற்றி
2022-11-12 16:35:21

நவம்பர் 12ஆம் நாள் 10:03, லாங்மார்ச்-7 Y6 ஏவூர்தி மூலம், தியேன் ச்சோ-5 என்ற சரக்கு விண்கலம், சீனாவின் வென் ச்சாங் விண்வெளி ஏவு மையத்திலிருந்து வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. பிறகு இது தடையின்றி திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, சுற்று வட்டப் பாதையில் இயங்கும் விண்வெளி நிலையத்துடன் சுமுகமாக இணையந்துள்ளது.

விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் தங்கும் விதமாக, ஷேன் ச்சோ-15 விண்கலத்தின் 3 வீரர்களுக்குத் தேவைப்படும் பொருட்கள், உந்து விசை மற்றும் பரிசோதனை மூலப்பொருட்கள்,  ஹே-ஒக்ஸ் கலம் முதலியவை, தியேன் ச்சோ-5 விண்கலம் மூலம் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளன.