சீன-ஆசியான் ஒத்துழைப்பு குறித்து சீனா கருத்து
2022-11-12 16:36:10

சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங், நவம்பர் 11ஆம் நாள் ஃபெனாம் பெனில் நடைபெற்ற 25ஆவது சீன-ஆசியான் உச்சிமாநாட்டில் உரையாற்றினார். ஆசியான் நாடுகளின் தலைவர்கள், ஆசியான் தலைமைச் செயலாளர் முதலியோரும் இதில் கலந்து கொண்டனர்.

லீக்கெச்சியாங் கூறுகையில், ஆசியானுடன் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பில் கவனம் செலுத்தி, மேலும் நெருங்கிய சீன-ஆசியான் பொது எதிர்காலச் சமூகத்தைக் கட்டியமைக்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

தென் சீனக் கடல் பரப்பில் பல்வேறு தரப்புகளின் செயல் அறிக்கை, கையொப்பமிடப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவு கூட்டறிக்கை உள்ளிட்ட பல ஆவணங்கள், இவ்வுச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.