இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7 %
2022-11-12 16:37:49

2022இல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என்று சர்வதேச கடன் தர நிர்ணய அமைப்பான மூடி குறைத்து மதிப்பிட்டுள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை மற்றும் உள்நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ள வட்டி விகிதங்கள், உயர் பணவீக்கம் ஆகியவை ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிரவும், நாணய மதிப்பின் சரிவு மற்றும் எண்ணெய் விலை உயர்வு ஆகியவை பணவீக்கத்தை அதிகரிக்கவே செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது

கடந்த இரு மாதங்களில் இரண்டாவது முறையாக பொருளாதார வளர்ச்சி மதிப்பை மூடி அமைப்பு குறைத்துள்ளது. முன்னதாக, மே மாதம் மதிப்பிடப்பட்டிருந்த 8.8 விழுக்காட்டு என்ற அளவை, கடந்த செப்டம்பரில் 7.7 விழுக்காடாகக் குறைத்திருந்தது நினைவுகூரத்தக்கது.