10+3 ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும்:லீ கெச்சியாங்
2022-11-12 19:52:11

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 12ஆம் நாள் ஃபெனோம் பென்னில் நடைபெற்ற 25வது ஆசியான் மற்றும் சீனா-ஜப்பான்-தென்கொரிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட போது, சீனா, தனது சொந்த வளர்ச்சியுடன் உலக நாடுகளுக்குப் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரவும், 10+3 ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கான புதிய இயக்க ஆற்றலை வழங்கவும் விரும்புகின்றது என்று தெரிவித்தார்.

10+3 ஒத்துழைப்பு, கிழக்காசிய ஒத்துழைப்பின் முக்கிய வழியாகும். ஒத்துழைப்பின் வளர்ச்சிப் போக்கை நாம் மேலும் அதிகரிக்க வேண்டும். நிலையான மற்றும் தங்கு தடையற்ற சர்வதேச தொழில்துறை சங்கிலியையும் விநியோகச் சங்கிலியையும் பேணிக்காத்து, பிரதேசங்கள் மற்றும் உலகத்தின் அமைதியையும் செழுமையையும் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.