தேசிய அளவில் சீனாவின் உத்தரவாதமான பங்களிப்பு இலக்குகளைச் செயல்படுத்தும் முன்னேற்றம் பற்றிய அறிக்கை
2022-11-12 16:38:47

தேசிய அளவில் சீனாவின் உத்தரவாதமான பங்களிப்பு இலக்குகளைச் செயல்படுத்தும் முன்னேற்றம் பற்றிய அறிக்கையைக் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் கட்டுக்கோப்பு பொது ஒப்பந்தத்தின் செயலகத்திடம் நவம்பர் 11ஆம் நாள் சீனா அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது.

2020ஆம் ஆண்டில் புதிய பங்களிப்பு இலக்குகளைச் சீனா முன்வைத்த பிறகு தொடர்புடைய பணிகளின் நிலைமையை இந்த அறிக்கை பிரதிபலிக்கிறது.

தொழில்துறை, நகர மற்றும் கிராமப்புறக் கட்டுமானம், போக்குவரத்து, வேளாண்மை, தேசிய நடவடிக்கை முதலிய முக்கிய துறைகளில் பசுங்கூட வாயுவின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் புதிய முன்னேற்றங்கள் இவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டன.