மியான்மர் 1.77 லட்சம் டன் மக்காச்சோள ஏற்றுமதி
2022-11-13 17:08:04

மியான்மர் 1.77 லட்சம் டன்னுக்கும் அதிகமாக மக்காச்சோள ஏற்றுமதி செய்து, அக்டோபர் மாதத்தில் 5.3 கோடி டாலர் வருவாயை ஈட்டியுள்ளதாக அந்நாட்டு வணிக அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

கொவைட்-19 நோய் பரவல் காரணமாக, பெரும்பாலான மக்காச்சோள ஏற்றுமதி கடல் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வணிக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சீனா, பிலிப்பைன்ஸ், வங்காளதேசம், இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு மக்காச்சோள ஏற்றுமதி அக்டோபரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீனா, இந்தியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கான, 2020-21 நிதியாண்டில் மியான்மரின் மொத்த மக்காச்சோள ஏற்றுமதி 23 லட்சம் டன் என்று கூறப்பட்டுள்ளது.