கலப்பு நெல் தொழில்நுட்பம் உலகத்துக்கான பங்களிப்பு
2022-11-13 16:31:24

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ கலப்பு நெல் உதவி மற்றும் உலக உணவு பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மன்றத்தில் 12ஆம் நாள் கலந்து கொண்ட போது, கலப்பு நெல் தொழில்நுட்பம், சீனா உணவு தன்னிறைவின் அதிசயத்தை அடைய உதவியது மட்டுமல்லாமல், உலகளாவிய உணவு பற்றாக்குறையைத் தீர்க்கவும் முக்கியப் பங்காற்றியுள்ளது என்றார். மேலும், பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் கூட்டாகப் பாடுபட்டு, உலக உணவுப் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கும் ஐ.நா.வின் 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி இலக்கை நனவாக்குவதற்கும் புதிய மற்றும் பெரிய பங்காற்ற சீனா விரும்புவதாகவும் வாங் யீ தெரிவித்தார்.