சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர்-லீக்கெச்சியாங் சந்திப்பு
2022-11-13 16:36:41

சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் 12ஆம் நாள் ஃபெனாம் பெனில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் ஜோச்கியேவாவுடன் சந்திப்பு நடத்தினார்.

லீக்கெச்சியாங் கூறுகையில், இவ்வாண்டு சீனப் பொருளாதாரம், நிலையாக மீட்சி அடைந்து வருகிறது. நியாயமான அளவில் செயல்படும் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் வகையில்,  ஒரு தொகுதி கொள்கைகளின் செயலாக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம் என்று தெரிவித்தார்.

ஜோச்கியேவா கூறுகையில், கோவிட்-19 நோய் பரவல் தொடக்கக் கட்டத்தில், சீனாவின் ஒட்டுமொத்த சமாளிப்பு கொள்கை சரியானது. சீனாவுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.