அமெரிக்க செனட் அவையைக் கட்டுப்படுத்தும் ஜனநாயகக் கட்சி
2022-11-13 17:08:39

அமெரிக்காவின் புதிய நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் செனட் அவையைத் தொடர்ந்து கட்டுப்படுத்துவர் என்று உள்ளூர் ஊடகங்கள் சனிக்கிழமை இரவு தெரிவித்துள்ளன. புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி தொடங்க உள்ளது.

ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் செனட் அவை உறுப்பினருமான கேதரீன் கோர்டெஸ் மாஸ்டோ, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஆடம் லேக்ஸால்டை தோற்கடிப்பார் என்று சிஎன்ன் மற்றும் என்பிசி போன்ற ஊடகங்கள் கணித்துள்ளன.

100 உறுப்பினர்கள் அடங்கிய செனட் அவையில் அடுத்த இரு ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சியினர் குறைந்தபட்சம் 50 இடங்களைப் பிடிப்பர் என்றும் குடியரசுக் கட்சியினர் 49 இடங்களையே பிடிப்பர் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.