17வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் லீ கெச்சியாங் பங்கெடுப்பு
2022-11-14 10:09:03

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், நவம்பர் 13ஆம் நாள் முற்பகல் கம்போடியாவின் புனோம் பென் நகரில் நடைபெற்ற 17வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கெடுத்தார். ஆசியான் நாடுகள், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கெடுத்தனர்.

லீ கெச்சியாங் கூறுகையில், தற்போதைய சர்வதேசச் சூழ்நிலை மிகவும் சிக்கலாக உள்ளது. அமைதி மற்றும் வளர்ச்சியைப் பெறுவதற்கான மக்களின் விருப்பம் மேலும் உறுதியாக இருக்கின்றது. பிரதேச நாடுகள் ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்து, ஒன்றுக் கொன்று நலன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, கையோடு கை கோர்த்து இடர்ப்பாடு மற்றும் அறைக்கூவல்களைச் சமாளிக்க வேண்டும் என்றார்.

மேலும், அவர் 3 முன்மொழிவுகளை வழங்கினார். முதலாவதாக, நெடுநோக்கு பேச்சுவார்த்தையில் ஊன்றி நின்று, பயன்தரும் பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பில் ஊன்றி நின்று, இடர்ப்பாடு மற்றும் அறைக்கூவல்களைச் சமாளிக்க வேண்டும். மூன்றாவதாக, ஆசியான் நாடுகளின் மையத் தகுநிலையில் ஊன்றி நின்று, சகிப்பு கொண்ட பிரதேச அமைப்புமுறையை உருவாக்க வேண்டும்.

தவிரவும், பிரதேச நாடுகள் ஒற்றுமையுடன் ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்து, திறப்பு மற்றும் சகிப்பு தன்மையுடைய பலதரப்புவாதத்தை மேற்கொண்டு, அமைதி, இணக்கம், செழுமை ஆகியவற்றைக் கொண்ட கிழக்காசிய பிரதேசத்தை உருவாக்க வேண்டும் என்று இம்மாநாட்டில் பங்கெடுத்த தலைவர்கள் தெரிவித்தனர்.