《ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள்》சிறப்புப் படம் ஒளிபரப்பு
2022-11-14 21:27:49

நவம்பர் 14ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 20 நாடுகள் உச்சிமாநாடு மற்றும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் ஆகியவற்றில் பங்கெடுப்பதை முன்னிட்டு, சீன மத்திய ஊடக குழுமம் தயாரித்த 《ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள்》என்ற சிறப்புப் படம்(இந்தோனேசிய மற்றும் தாய்லாந்து மொழி), பல மொழிகளிலான 《சீனா, புதிய பயணம்》என்னும் ஆவணத் திரைப்படம் ஆகியவற்றின் ஒளிபரப்பு விழா பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறையின் துணை அமைச்சரும் சீன மத்திய ஊடக குழுமத்தின் தலைவருமான ஷேன் ஹாய் ஷியொங் அதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், இலங்கை உள்ளிட்ட பன்னாடுகளின் தேசியத் தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் முக்கிய ஊடகங்களின் பொறுப்பாளர்களும், காணொளி வழியாக இவ்விழாவில் பங்கெடுத்தனர்.