இஸ்தான்புல் குண்டுவெடிப்பின் குற்றவாளி கைது
2022-11-14 16:26:04

இஸ்தான்புல் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர், காவற்துறையால் கைது செய்யப்பட்டார் என்று துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலேமன் சொயிலூ 14ஆம் நாள் தெரிவித்தார்.

நவம்பர் 13ஆம் நாள் மாலை இஸ்தான்புல் மையப்பகுதியின் சாலை ஒன்றில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 81 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது, தீவிரவாதத் தாக்குதல் என்று துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன் 13ஆம் நாள் குற்றஞ்சாட்டினார்.