பாகிஸ்தான் தலைமை அமைச்சர் ஷாபாஸின் சிறப்பு நேர்காணல்
2022-11-14 16:17:05

நவம்பர் மாத தொடக்கத்தில் சீனாவில் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் தலைமை அமைச்சர் ஷாபாஸ் ஷெரீஃப் சீன ஊடக குழுமத்தின் ‘தலைவர்கள் உரையாடல்’ எனும் நிகழ்ச்சிக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

இந்தப் பேட்டியில், பயணத்தின் சாதனைகள், சீன – பாகிஸ்தான் உறவு உள்ளிட்ட  நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். குறிப்பாக, சீன அச்சுறுத்தல் என்ற கருத்தைப் பரப்புதல், வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருந்து சீனாவின் வளர்ச்சியைத் தடுப்பது போன்ற சில நாடுகளின் செயல்கள் குறித்து ஷாபாஸ் கூறுகையில்

வரலாற்றைத் திரும்பி பார்க்கும் போது, வரலாற்றில் சீனா எப்போதும் செழிப்பான மற்றும் வளமான நாடாக திகழ்ந்தது. பின்னர், வெளிநாட்டுச் சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டதால், சீனா அரை-காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்தது. 1949ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக, சீன மக்கள் கடினமான உழைப்புடன் இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இன்றைய சீனா, உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது.  2021ஆம் ஆண்டு வெளிநாட்டு வர்த்தகத் தொகை, 6 லட்சம் கோடி அமெரிக்க டாலராகப் பதிவாகியுள்ளது. பல லட்சம் கோடிக்கணக்கான  அமெரிக்க டாலர்  அந்நியச் செலாவணி கையிருப்பு இருக்கிறது. மக்களுக்கு, உறைவிடம், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அனைவரும், நவீனமயமான போக்குவரத்து, கல்வி, தொழில்நுட்பம் ஆகியவற்றை அனுபவிக்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

சீனாவிற்கு விரிவாக்கத்தில் ஈடுபடும் நோக்கமில்லை. உலகமயமாக்கம் என்பது, சீனாவின் கண்ணோட்டம். அதாவது, பல்வேறு நாடுகள் ஒன்றாக இணைந்து, வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைவதாகும். ஆனால், சில நாடுகள் சீனாவை அடக்கி வைக்கும் கொள்கை தவறாக உள்ளது. உலகின் வளர்ச்சிக்கு சீனா தேவை என்பதைப் போல சீனாவின் வளர்ச்சிக்கு உலகம் தேவை. அமைதியான வளர்ச்சியைப் பின்பற்றுவது சீனாவின் இலக்கு என்றும் ஷபாஸ் சுட்டிக்காட்டினார்.