ஈரநிலங்கள் பற்றிய பொது ஒப்பந்த தரப்புகளின் 14ஆவது மாநாட்டின் நிறைவு
2022-11-14 10:27:52

ஈரநிலங்கள் பற்றிய பொது ஒப்பந்த தரப்புகளின் 14ஆவது மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றி நவம்பர் 13ஆம் நாள் நிறைவடைந்துள்ளது. வூஹன் அறிக்கை, 2025 முதல் 2030ஆம் ஆண்டு வரை உலக ஈரநில பாதுகாப்பு நெடுநோக்கு கட்டுக்கோப்பு உள்ளிட்ட சாதனைகள் இம்மாநாட்டில் எட்டப்பட்டன.

ஈரநிலங்களுக்கான பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்தி, சர்வதேச ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று இக்கட்டுக்கோப்பில் தெரிவிக்கப்பட்டது.

சீனா முன்மொழிந்த 3 முன்மொழிவுகள் உள்ளிட்ட 21 முன்மொழிவுகள் இம்மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டன. உலக ஈரநில பாதுகாப்பு இலட்சியத்தின் உயர் தர வளர்ச்சியை இவை முன்னேற்றியுள்ளன.

இம்மாநாட்டுக் காலத்தில், சீனா தலைமை நாடாக பொறுப்பு ஏற்று, நிறைய சாதனைகள் எட்டப்படுவதற்கு துணைப் புரிந்துள்ளது.

ஈரநிலங்கள் பற்றிய பொது ஒப்பந்த தரப்புகளின் 15ஆவது மாநாடு சிம்பாப்வேவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.