ஜி20 உச்சிமாநாட்டில் தலைவர்களின் மனைவிகள் பங்கெடுக்கும் நிகழ்வில் பெங் லியுவான் பங்கெடுப்பு
2022-11-15 20:11:47

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லியுவான் அம்மையார் 15ஆம் நாள் காலை பாலி தீவில் இந்தோனேசிய அரசுத் தலைவரின் மனைவி இலியானா ஏற்பாடு செய்த ஜி20 உச்சிமாநாட்டில் தலைவர்களின் மனைவிகள் பங்கெடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

உள்ளூர் இசைக்கருவிகள், ஆடைகள், பூத்தையல் வேலை, சுற்றுச்சூழல் உணவு ஆகியவை பற்றிய கண்காட்சியை அவர் கண்டு ரசித்தார். மேலும், வறுமையிலிருந்து விடுபட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுக்கும் இந்தோனேசியாவின் கைவினை உற்பத்தியை அவர் பாராட்டினார்.