இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 280 படங்கள் திரையிடப்பட உள்ளது
2022-11-15 15:05:02

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, இந்தியாவின் மேற்கு மாநிலமான கோவாவில் நவம்பர் 20 முதல் 28ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. இதில் 79 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து 280 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.   

இந்தியாவில் இருந்து மொத்தம் 25 திரைப்படங்கள் மற்றும் 20 ஆவணப்படங்கள் இந்திய பனோரமா பிரிவில் திரையிடப்படுகின்றன. மேலும், 183 திரைப்படங்கள் சர்வதேச திரைப்படங்கள் பிரிவில் திரையிடப்படுகின்றன என்று இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இத்திரைப்பட விழாவில், எட்டு பிரெஞ்சு திரைப்படங்கள் கண்ட்ரி ஃபோகஸ் தொகுப்பின் கீழ் திரையிடப்படுகின்றது. மேலும்,  இத்திரைப்பட விழாவில், காணொளி வழியாகவும் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.