சீன-அமெரிக்க உறவை மேம்படுத்துவதற்குச் செயல்கள் தேவை
2022-11-15 19:07:33

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 14ஆம் நாள் பிற்பகல் பாலி தீவில் அமெரிக்க அரசுத் தலைவர் பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 3 ஆண்டுகளில் இரு நாட்டுத் தலைவர்கள் மேற்கொண்ட முதலாவது சந்திப்பாகவும், ஜோ பைடன் பதவி ஏற்ற பின் ஷிச்சின்பிங்குடனான முதலாவது சந்திப்பாகவும் இது அமைந்தது. ஆழமான கருத்து பரிமாற்றம், எச்சரிக்கை கோட்டை உறுதிப்படுத்துதல், மோதலைத் தவிர்த்தல், எதிர்காலத் திசைக்கு வழிகாட்டுதல், ஒத்துழைப்பை பற்றி விவாதித்தல் முதலிய இலக்குகள், இச்சந்திப்பில் நனவாக்கப்பட்டுள்ளன.

சீனா பற்றி அமெரிக்கா தவறாக நினைப்பது, இரு நாட்டுறவு, தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்ட அடிப்படைக் காரணமாகும். இது குறித்து ஷிச்சின்பிங் கூறுகையில், தற்போதைய சர்வதேச ஒழுங்கு முறையை மாற்றவும், அமெரிக்க உள்விவகாரங்களில் தலையீடு செய்யவும், அமெரிக்காவுக்கு அறைகூவல் விடுக்கும் செயலையும் சீனா நாடாது என்று தெரிவித்தார். சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடுகள் மற்றும் 3 சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளைப் பின்பற்றுவது, இரு தரப்புகள், முரண்பாடு மற்றும் சர்ச்சைகளைக் கட்டுப்படுத்தி, மோதல் தடுப்புக்குத் திறவுகோலாகும் என்றும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

பைடன் கூறுகையில், நிலையான மற்றும் வளர்ச்சி அடைந்த சீனா, அமெரிக்க மற்றும் உலகின் நலன்களுக்குப் பொருந்தும் என்று தெரிவித்தார்.

வரும் காலத்தில் இரு நாட்டுத் தலைவர்களின் பொது கருத்துகளை நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக, அமெக்கா, பைடனின் வாக்குறுதிகளைச் செயல்படுத்தி, சீனாவுடன் இணைந்து இரு நாட்டுறவை முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.