செங்து மாநகரில் 19ஆவது சர்வதேச உணவு விழா தொடக்கம்
2022-11-15 18:12:52

சீனாவின் சிச்சுவான் மாநிலத் தலைநகர் செங்துவில் 19வது சர்வதேச உணவு விழா சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. செங்து பாணியுடைய உணவுப் பொருட்களைத் தேடி ருசிப்பது என்ற தலைமையில், தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வணிகர்களுக்கும் நுகர்வோருக்கும் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி,  உணவக தொழில் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், இந்த தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


நடப்பு உணவு விழா நடைபெறுவதற்கான முக்கிய களத்தில் 6 பிரிவுகள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 60 கண்காட்சி அரங்குகள் நிறுவப்பட்டுள்ளன. அங்கு 100க்கம் அதிகமான பல்வகை தனிச்சிறப்புமிக்க உணவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

தவிர, செங்து மற்றும் சோங்கிங் பாணியுடைய உணவுகளின் சிறப்புக் கண்காட்சி, 2023ஆம் ஆண்டு  புதிய உணவு வகைகளின் வெளியீடு, 2023ஆம் ஆண்டு செங்துவின் தலைசிறந்த உணவகங்கள் தேர்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடுதலாக, இவ்வாண்டின் டிசம்பர் மாதம் வரை, செங்து மாநகரைச் சேர்ந்த 23 பகுதிகளில் சுமையான உணவுகளை ருசிக்கும் நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நடத்தப்படும். இதன் மூலம், செங்துவில் அருமையான வாழ்க்கை வழிமுறை அனுபவிக்கப்படலாம்.


இந்த தொடர் நிகழ்ச்சிகளின் மூலம் நகர்வாசிகள் செங்து மாநகரின் சிறப்பம்சங்களை உணர்ந்திருக்கும் அதேவேளையில், நுகர்வுத் திறனை மேம்படுத்தி, சர்வதேச உணவு நகரைக் கட்டியெழுப்புவதற்கு துணை புரிய முடியும் ன்று செங்து அரசின் வணித் துறையின் அதிகாரி ஒருவர் விருப்பம் தெரிவித்தார்.