காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது பற்றிய உயர் நிலை கருத்தரங்கு
2022-11-15 10:45:40

காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா கட்டுக்கோப்பு ஒப்பந்த தரப்புகளின் 27ஆவது மாநாட்டின் சீன காட்சியிடத்தில், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு பற்றிய உயர் நிலை கருத்தரங்கு 14ஆம் நாள் நடைபெற்றது. சீன அரசுத் தலைவரின் சிறப்பு பிரதிநிதியும், காலநிலை விவகாரத்துக்கான சீனாவின் சிறப்பு பிரதிநிதியுமான சியெ சென்ஹுவா இக்கருத்தரங்கில் கூறுகையில்,

காலநிலை மாற்றத்தால் வளரும் நாடுகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. தொழில் நுட்பம் மற்றும் நிதி உதவி அவசியமாக தேவைப்படுகின்றது என்றார்.

காலநிலை மாற்றம் பற்றிய பேச்சுவார்த்தைக்கான சீன பிரதிநிதிக் குழுவின் தலைவரும் சீன துணை சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல்  அமைச்சருமான சாவ் யிங்மின் கூறுகையில்,

பொறுப்புணர்வு மிக்க பெரிய வளரும் நாடான சீனா, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை இடைவிடாமல் மேற்கொண்டு வருகின்றது. வளரும் நாடுகள் இதற்கு வரவேற்பையும் பாராட்டையும் தெரிவிக்கின்றன என்றார்.

காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா கட்டுக்கோப்பு ஒப்பந்தச் செயலகத்தின் செயலாளர் ஸ்தீல்,

தெற்கு-தெற்கு ஒத்துழைப்பில் சீனாவின் பங்கினை பாராட்டினார்.