உலக வளர்ச்சிக்கு சீனா மற்றும் ஐரோப்பாவின் பங்கு
2022-11-15 10:53:14

நவம்பர் 15ஆம் நாள், இந்தொனேசியாவின் பாலி தீவில், பிரேஞ்சு அரசுத் தலைவர் மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கூறுகையில்,

உலக பலமுனைமயமாக்கத்தில் இரு முக்கிய சக்திகளாக சீனாவும் பிரான்ஸும் திகழ்கின்றன. சீன-பிரேஞ்சு உறவும், சீன-ஐரோப்பிய உறவும், சுதந்திரம், ஒத்துழைப்பு, திறப்பு ஆகியவற்றில் ஊன்றி நின்று சரியான பாதையில் இரு தரப்புறவின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றார்.

சீன பாணி நவீனமயமாக்கம் மிகவும் பாராட்டத்தக்கது. சுதந்திரத் தூதாண்மை கொள்கையில் ஊன்றி நிற்கும் பிரான்ஸ், முகாம்களின் பகைமையை எதிர்க்கின்றது என்று மக்ரோன் தெரிவித்தார்.