சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் சந்திப்பு பற்றி வாங் யீ அறிமுகம்
2022-11-15 10:38:55

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 14ஆம் நாள் பாலி தீவில் அமெரிக்க அரசுத் தலைவர் பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஊடகங்களிடம் இச்சந்திப்பு பற்றி அறிமுகம் செய்து கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

வாங் யீ கூறுகையில், சீன-அமெரிக்க உறவு, உலகின் அமைதியான வளர்ச்சி வாய்ப்பு ஆகியவை தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து இருநாட்டு அரசுத் தலைவர்கள் மனம் திறந்து ஆழ்ந்த முறையில் செயலாக்கம் மற்றும் நெடுநோக்கு வாய்ந்த பரிமாற்றம் மேற்கொண்டனர் என்று தெரிவித்தார்.

சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சிப் போக்கு பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், நடப்பு சந்திப்பு, தற்போதைய நடைமுறைக்கு வழிகாட்டல் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, அடுத்த கட்டம், மேலும் நீண்டகாலமாக இருநாட்டுறவுக்கு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

தைவான் பிரச்சினை நடப்பு சந்திப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த போது, தைவான் சீனாவின் ஒரு பகுதியாகும். தைவான் பிரச்சினை, சீனாவின் உள்விவகாரமாகும். அமெரிக்கா சீனாவின் உள்விவகாரத்தில் தலையிட்டதால், இப்பிரச்சினை பற்றி விவாதிக்க வேண்டியிருந்தது. சீனாவின் உள்விவகாரத்திலான தலையீட்டை நிறுத்தி, சீனாவின் இறையாண்மை மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது எங்களின் தெளிவான கோரிக்கையாகும். ஒரே சீனா கொள்கையை அமெரிக்கா கடைப்பிடித்து, தைவான் சுதந்திரம், இரு சீனா அல்லது ஒரு சீனா ஒரு தைவான் என்பதை ஆதரிக்காமல், தைவான் பிரச்சினையைக் கருவியாகக் கொண்டு சீனாவைக் கட்டுப்படுத்த செயல்படாது என அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் தெரிவித்துள்ளார் என்று வாங் யீ கூறினார்.

பொதுவாக கூறினால், ஆழ்ந்த முறையில் பரிமாற்றம் மேற்கொள்வது, நோக்கங்களைத் தெளிவுபடுத்துவது, மோதலைத் தடுப்பது, திசையைக் காட்டுவது, ஒத்துழைப்பு பற்றி விவாதம் நடத்துவது உள்ளிட்ட இலக்குகளை நடப்பு சந்திப்பு எட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.