அக்டோபரில் சீனத் தேசிய பொருளாதாரம் மீட்சி அடைந்து போக்கு
2022-11-15 15:02:48

சீனத் தேசிய புள்ளிவிவரப்பணியகம் 15ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் தேசிய பொருளாதாரத் துறையில் மீட்சி அடையும் வளர்ச்சிப் போக்கு தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. தொழில் துறையில் முதலீடுகளின் நிலையான அதிகரிப்பு காணப்பட்டது. பொதுவாக, வேலை வாய்ப்பும் விலைவாசியும் நிதானமாதனாக உள்ளது. என்று தெரிவிக்கப்பட்டன.

தவிர, இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில், மொத்த சரக்கு இறக்குமதி ஏற்றுமதி தொகை கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 9.5விழுக்காடு அதிகமாகும். மேலும், இக்காலகட்டத்தில், நாடு முழுவதும் வேலை வாய்ப்பில்லாதவர்களின் விகிதம் சராசரியாக 5.6விழுக்காடாகும். நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 2விழுக்காடு அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.