உலக மக்கள் தொகை 800 கோடி:ஐ.நா
2022-11-15 17:52:21

உலகின் மொத்த மக்கள் தொகை நவம்பர் 15ஆம் நாள் 800 கோடியை எட்டியுள்ளது என்று ஐ.நா அறிவித்தது. பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, மற்றும் மருத்துவத் துறையின் மேம்பாடு, மனித ஆயுள் காலத்தை நீட்டிக்க உதவியதாக நம்பப்படுகிறது.

மனித குலம், பூமிக்குப் பொது பொறுப்பேற்கும் தருணம் இப்போது ஆகும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸ் தெரிவித்தார்.

உலகின் மக்கள் தொகை 700 கோடியிலிருந்து 800 கோடியாக அதிகரிப்பதற்குச் சுமார் 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேலும் 100 கோடி மக்கள் தொகை அதிகரிப்பதற்கு 15 ஆண்டுகள் தேவை என்று மதிப்பிடப்பட்டது. மக்கள் தொகையின் அதிகரிப்பு வேகம் குறைந்து வருவதை இது காட்டியுள்ளது.