ஜகார்த்தா-பான்துங் அதிவிரைவு இருப்புப் பாதைக்கான சோதனை வெற்றி
2022-11-16 20:03:21

சீனா மற்றும் இந்தோனேசியாவின் ஒத்துழைப்பில் கட்டியமைக்கப்பட்ட ஜகார்த்தா-பான்துங் அதிவிரைவு இருப்புப் பாதையின் சோதனை அண்மையில் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த அதிவிரைவு இருப்புப் பாதை, 142.3 கிலோமீட்டர் நீளமுடையது. அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கிலோமீட்டராகும். இது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம் மற்றும் சீனாவுக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய திட்டப்பணியாகும்.

சீனத் தொழில்நுட்பத்தையும் சீன வரையறையையும் பயன்படுத்தி சீனத் தேசிய ரயில்வே குழுமத்தைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களால் இந்த இருப்புப் பாதை கட்டியமைக்கப்பட்டது.

இதன் மூலம், ஜகார்த்தாவிலிருந்து பான்துங்கிற்கான பயண நேரம் 3 மணி நேரத்திலிருந்து 40 நிமிடங்களாகக் குறையும்.