ஜி20 அமைப்பு தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாடு நிறைவு
2022-11-16 16:49:39

ஜி20 அமைப்பு தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாடு, 16ஆம் நாள் மாலை பாலி தீவில் நிறைவடைந்தது. இந்தோனேசியாவைத் தொடர்ந்து, இவ்வமைப்பின் தலைவர் நாடாக, இந்தியா பதவியை ஏற்றது.

இவ்வுச்சிமாநாட்டில், சர்வதேச சுகாதார அடிப்படை வசதிகள், எண்ணியல் மாற்றம், தொடரவல்ல எரியாற்றல் மாற்றம் ஆகிய மூன்று தலைப்புகள், முக்கியமாக விவாதிக்கப்பட்டன.