உயிரினப் பல்வகைமை பற்றி சீனா, கனடா கூட்டாக நடத்திய நிகழ்வு
2022-11-16 10:33:32

காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா. கட்டுக்கோப்பு ஒப்பந்த தரப்புகளின் 27ஆவது மாநாட்டின் போது, COP15 எனப்படும் உயிரினப் பல்வகைமை பொது ஒப்பந்த தரப்புகளின் 15ஆவது மாநாட்டின் தலைமை நாடான சீனா மற்றும் இம்மாநாட்டின் 2ஆவது கட்டக் கூட்டத்தின் உபசரிப்பு நாடான கனடா, நவம்பர் 15ஆம் நாள் எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில், உயிரினப் பல்வகைமை செயல்பாட்டுக்கான அமைச்சர்களின் நிகழ்வை நடத்தின.

COP15 மாநாட்டின் 2ஆவது கட்டக் கூட்டத்துக்கு முன் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, உயிரினப் பல்வகைமை அழியும் போக்கைத் தடுத்து மாற்றுவதற்கு, 2020ஆம் ஆண்டுக்குப் பிந்தைய உலகளாவிய உயிரினப் பல்வகைமை கட்டுக்கோப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது இந்நிகழ்வின் நோக்கமாகும்.

சீனச் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் துணை அமைச்சர் சாவ் யிங்மின் இந்நிகழ்வில் உரை நிகழ்த்துகையில், COP15 மாநாட்டின் தலைமை நாடான சீனா, தலைமை மற்றும் ஒருங்கிணைப்பு பங்கினை வெளிப்படுத்தி, உலகளாவிய உயிரினப் பல்வகைமை பாதுகாப்புப் பணியை முன்னேற்றி வருகிறது என்று தெரிவித்தார்.