சீன ஊடகக் குழுமத்தின் ஒலிம்பிக் அலைவரிசையின் மேம்பாட்டுக்கான கலந்துரையாடல் கூட்டம்
2022-11-16 11:25:57

சீன ஊடகக் குழுமத்தின் ஒலிம்பிக் அலைவரிசையின் மேம்பாட்டுக்கான கலந்துரையாடல் கூட்டம் நவம்பர் 15ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியொங் இக்கூட்டத்தில் கூறுகையில், சீன ஊடகக் குழுமம் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தாக்கத் தன்மையுடைய கருத்துக்களின் மூலம், புதிய யுகத்தில் சீனக் கதை, சீன விளையாட்டு எழுச்சி, ஒலிம்பிக் பண்பாடு ஆகியவற்றை மேலும் செவ்வனே பரப்புரை செய்யும் என்றார்.

சீன ஊடகக் குழுமத்தின் ஒலிம்பிக் தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் அதன் எண்ணியல் அலைவரிசை 2021ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள் துவங்கியது. அப்போது சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வாழ்த்துச் செய்தி அனுப்பியது நினைவுகூரத்தக்கது. இவ்வாண்டு, இந்த அலைவரிசையின் முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.