சீன மத்திய ஊடகக் குழுமம்-இந்தோனேசிய தேசிய வானொலி நிலைய ஒத்துழைப்பு குறிப்பாணை
2022-11-16 20:09:59

சீன மத்திய ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷேன் ஹாய் ஷியொங், இந்தோனேசிய தேசிய வானொலி நிலையத்தின் தலைவர் யீ ஹன்ட்ரஸ்மொ ஆகியோர், இரு தரப்பு ஒத்துழைப்பு குறிப்பாணையில் கையொப்பமிட்டுள்ளனர்.

இரு நாட்டு மக்களின் புரிந்துணர்வு மற்றும் நட்பு உணர்வு அதிகரிக்கும் விதம், சமத்துவம், பரஸ்பர நலன், நட்புக் கலந்தாய்வு ஆகிய கோட்பாடுகளைப் பின்பற்றி, இரு தரப்புகள், வழக்கமான ஒத்துழைப்பு முறைமை உருவாக்கி, கூட்டுத் தயாரிப்பு, மனித பரிமாற்றம், தொழில் நுட்பப் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் விரிவான ஒத்துழைப்பை மேற்கொள்ளும் என்று இக்குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டது.

1945ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தோனேசியத் தேசிய வானொலி நிலையம், 9 மொழிகளில் வானொலி ஒலிபரப்பு வழங்குகின்றது.