உலக ஊடக மாநாட்டில் பங்கெடுத்த சீன ஊடகக் குழுமம்
2022-11-17 14:34:50

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் உலகளாவிய ஊடக மாநாடு 15ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் அபுதாபியில் தொடங்கியது. ‘ஊடகத் தொழிலின் எதிர்காலத்தை வடிவமைப்பது’ என்ற தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஊடகங்களின் பிரதிநிதிகள், வணிகத் துறை பிரமுகர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேலானோர் கலந்து கொண்டனர். சீன ஊடகக் குழுமம் இம்மாநாட்டின் ஊடக ஒத்துழைப்புக் கூட்டாளியாக பங்கெடுத்தது.

 

மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த சீன ஊடகக் குழுவின் கண்காட்சி அரங்கைப் பார்வையிட்ட ஐக்கிய அரபு அமீரகத்துக்கான சீனத் தூதர் ட்சாங் யிமிங், இரு நாடுகளின் ஊடக ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் உலகளாவிய ஊடக மாநாட்டுக்கான ஏற்பாட்டு குழுத் தலைவரும் அந்நாட்டு தேசியச் செய்தி நிறுவனத்தின் இயக்குநருமான முகமது ஜெரால் ரைஸ், மாநாட்டில் பங்கெடுத்துள்ள சீன ஊடகங்களுக்குப் பாராட்டு தெரிவித்ததோடு, சீனாவின் பெரிய அளவிலான ஊடக நிறுவனங்கள் இம்மாநாட்டில் பங்கெடுப்பது, இரு நாடுகளின் பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவை வளர்ப்பதற்கான நல்ல சான்று என்றும் தெரிவித்தார்.