சீன-ஆப்பிரிக்க ஊடகக் கருத்தரங்கு
2022-11-17 20:07:01

சீன மத்திய ஊடகக் குழுமத்தின் ஆப்பிரிக்க நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “புதிய பயணத்தில் சீனாவும் உலகமும்”என்ற சீன-ஆப்பிரிக்க ஊடகக் கருத்தரங்கு, 16ஆம் நாள் கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்றது. கென்யா, ருவான்டா, தான்சானியா, மடகாஸ்கர் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 60 ஊடகப் பொறுப்பாளர்களும் நிபுணர்களும், புதிய பயணத்தில் நடைபோடும் சீனா, ஆப்பிரிக்காவுக்கான முக்கியத்துவம், இரு தரப்பின் பொது எதிர்காலச் சமூத்துக்கு சீன-ஆப்பிரிக்க ஊடக ஒத்துழைப்பின் பங்கு முதலிய அம்சங்கள் குறித்து ஆழமாக கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டுக்குப் பிந்தைய வளர்ச்சி, ஆப்பிரிக்காவுக்குப் புதிய வாய்ப்புகளை விளைவித்து, இரு தரப்பின் பொது எதிர்காலச் சமூத்துக்குப் புதிய உந்து சக்தியை ஊட்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.