சீன-இந்தொனேசிய அரசுத் தலைவர்களின் சந்திப்பு
2022-11-17 11:30:38

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் இந்தொனேசிய அரசுத் தலைவர் ஜோகோ வெடோடோவும் நவம்பர் 16ஆம் நாளிரவு பேச்சுவார்த்தை நடத்தினர். சீன-இந்தொனேசிய பொது சமூகத்தை உருவாக்குவது குறித்து இரு நாட்டு அரசுத் தலைவர்கள் ஒற்றுமை எட்டியுள்ளனர். அடுத்த ஆண்டு இரு நாட்டு பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவை அடிப்படையாக கொண்டு, உயர் நிலை ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்க இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஜகார்தா-பன்தூங் உயர் வேக இருப்புப்பாதையின் சோதனை பயணத்தை இருவர் காணொளி வழியாக பார்த்தனர். ஜி20 நாடுகள் அமைப்பு தலைவர்கள் உச்சி மாநாடு இந்தொனேசியாவில் வெற்றிகரமாக நடைபெற்றதற்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில்,

இந்தொனேசியாவுடன் இணைந்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியை தொடர்ந்து ஆழமாக்கி, ஜகார்தா-பன்தூங் உயர் வேக இருப்புப்பாதையின் இயக்கத்தை முன்னேற்ற சீனா விரும்புகின்றது என்றார்.

ஜொகொ வெடோடோ கூறுகையில்,

சீனாவுடன் இணைந்து, பிரதேச ஒட்டுமொத்த பொருளாதார மண்டலத்தையும் இரு நாட்டு பொது சமூகத்தையும் கூட்டாக கட்டியமைக்க இந்தொனேசியா விரும்புகின்றது என்றார்.

சீனா-இந்தொனேசியா கூட்டறிக்கையை இருவர் வெளியிட்டனர்.