உலகளாவிய வளர்ச்சி பற்றிய கேள்விக்கு சீனாவின் பதில்
2022-11-17 10:12:18

ஜி20 அமைப்புத் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாட்டின் போது சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நிகழ்த்திய முக்கிய உரையில், ‘வளர்ச்சி’ என்பதைக் குறிப்புச் சொல்லாகக் கொண்டு, ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் மேலும் அதிகமானோரை உள்ளடக்கிய, மேலும் பெரும் நலன் தரக் கூடிய மற்றும் மேலும் பெரும் நெகிழ்வுத் தன்மை வாய்ந்த உலகளாவிய வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்தார். அவரின் இக்கருத்துக்கு ஆதரவாக பரவலான குரல்கள் எழுந்துள்ளன.

அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான திறவுகோலாக திகழும் வளர்ச்சி, மீட்சியைத் தூண்டும் முக்கிய இயக்காற்றலும் ஆகும். தற்போதைய சூழ்நிலையில் எத்தகைய வளர்ச்சி நமக்குத் தேவை என்ற கேள்விக்கு, உலகளாவிய வளர்ச்சி குறித்த ஷிச்சின்பிங்கின் 3 அம்ச முன்மொழிவு பதிலாக அமைந்துள்ளது. மேலும் அதிகமானோரை உள்ளடக்குவது, மேலும் பெரும் நலன் தருவது, மேலும் பெரும் நெகிழ்வுத் தன்மை வாய்ந்தது ஆகியவற்றை வலியுறுத்தும் அவரது முன்மொழிவு அவசியம் மற்றும் முக்கியத்துவத்துடன், உலகின் தொவடரவல்ல வளர்ச்சிக்கு இயக்காற்றலை வழங்கியுள்ளது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.

உலகளாவிய வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள உணவு மற்றும் எரியாற்றல் பாதுகாப்பு பிரச்சினைக்குரிய தீர்வினை வழங்கும் பொருட்டு ஷிச்சின்பிங், வணிகப் பொருட்களுக்கான ஒத்துழைப்புக் கூட்டுறவை உருவாக்குவது, உணவு மற்றும் எரியாற்றல் பிரச்சினையை அரசியல்மயமாக்கத்தையும், அதனை கருவி அல்லது ஆயுதமாகக் கொண்டு பயன்படுத்துவதையும் எதிர்ப்பது போன்ற ஆலோசனைகளையும் முன்வைத்தார்.

நவீனமயமாக்கம் நோக்கி முன்னேறி வரும் சீனா, உலகிற்கு மேலதிக வாய்ப்புகளை உருவாக்கி, கூட்டு மற்றும் வலுவான மீட்சியை ஊக்குவிக்கும் என்பது உறுதி.