ஊடகத் துறையில் சீன-தாய்லாந்து ஒத்துழைப்பு
2022-11-18 14:56:29

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், பாங்காக் நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 29வது தலைவர்கள் கூட்டத்தில் பங்கெடுக்க, தாய்லாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சீன ஊடகக் குழுமம் தாய்லாந்து மக்கள் தொடர்பு பணியகத்துடன் ஒத்துழைப்புக் குறிப்பாணையில் கையொப்பமிடுவது குறித்து, சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹாய்சியொங், தாய்லாந்து தலைமையமைச்சர் அலுவலகத்தின் அமைச்சர் அனுச்சா நகஸாய் ஆகியோர் ஒத்த கருத்தை எட்டியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில், சீன ஊடகக் குழுமமும், தாய்லாந்து மக்கள் தொடர்பு பணியகமும், ஊடகத் துறையில் அதிகமான பயன்தரும் ஒத்துழைப்புகளை மேற்கொண்டுள்ளன. இவ்வாண்டு, சீன-தாய்லாந்து பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவு உருவாக்கப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவாகும். இரு தரப்பும் வழக்கமான ஒத்துழைப்பு முறைமையை உருவாக்கி, ஊடகத் தொழில் நுட்ப பரிமாற்றத்தை முன்னேற்றி, சீன-தாய்லாந்து பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்துக்குப் பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.