சீன - பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர்களின் சந்திப்பு
2022-11-18 14:12:58

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், நவம்பர் 17ஆம் நாள் மாலை, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பிலிப்பைன்ஸின் அரசுத் தலைவர் மாகோஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப்பேச்சுவார்த்தையின் போது, சீனா எப்போதும் நெடுநோக்கு பார்வையுடன், இரு நாட்டுறவை கருத்தில் கொண்டு வருவதாகவும், இரு நாடுகளும் ஒத்துழைப்பு தரத்தை மேம்படுத்தி இரு நாட்டு மக்களுக்கு நன்மை தர வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார். மேலும், பிலிப்பைன்ஸுடன் இணைந்து, நட்புறவுடன் தொடர்ந்து ஒத்துழைப்புகளை வலுப்படுத்த சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸின் உள்நாட்டுக் கட்டுமானத்துக்கு சீனா ஏராளமான ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான நம்பிக்கை வலுப்பட்டு வருவதாகவும், சீனாவுடன் இணைந்து மேலும் நிலையான வலுவான இரு நாட்டுறவை உருவாக்குவதை எதிர்பார்ப்பதாகவும்  மாகோஸ் தெரிவித்தார்.