ஆசிய-பசிபிக் அதிசய உருவாக்கத்துக்குத் துணைபுரியும் சீன ஆலோசனைகள்
2022-11-18 20:38:49

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 18ஆம் நாள் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 29ஆவது தலைவர்கள் கூட்டத்தில், புதிய நிலைமையில் இப்பிராந்தியப் பொது எதிர்கால சமூகத்தின் கூட்டு உருவாக்கம் குறித்து 4 ஆலோசனைகளை முன்வைத்தார்.

கடந்த சில பத்து ஆண்டுகளில் ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பு, உலகத்தை வியக்க வைக்கும் அதிசயங்களை உருவாக்கி, உலக பொருளாதார வளர்ச்சிக்கான உந்து விசையாக மாறியுள்ளது. இப்பிராந்தியத்தின் விரைவான வளர்ச்சிக்குக் காரணம், அமைதி மற்றும் நிலையான சூழ்நிலையே ஆகும்.

ஷிச்சின்பிங் முன்வைத்த ஆலோசனைகள், ஆசிய-பசிபிக் பிராந்திய அமைதியைப் பேணிக்காக்கும் சீனாவின் உறுதியான விருப்பத்தைக் காட்டுகின்றன. அவர் வலியுறுத்திய பொதுவான எதிர்காலம், ஆசிய-பசிபிக் ஒத்துழைப்புக்கான சரியான திசையாகும்.

இதற்கிடையில், சீனா, மேலும் பெருமளவிலான வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையில் ஊன்றி நின்று, சீன பாணியுடைய நவீனமயமாக்கப் பாதையில் நடைபோட்டு, உலகத்துடன் குறிப்பாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்துடன் சீன வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.