பணவீக்கம் மீதான எதிர்பார்ப்பு நிலையாக இருப்பதை உறுதி செய்வது முக்கியம்:ஐரோப்பிய மத்திய வங்கி
2022-11-19 18:53:16

உயர்ந்த பணவீக்கம் ஏற்படும் போது, பணவீக்கம் மீதான எதிர்பார்ப்பு நிலையாக இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது. பணவீக்க விகிதம் இடைக்கால இலக்கு நிலைக்கு குறைக்க ஐரோப்பிய மத்திய வங்கி காலதாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இவ்வங்கித் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் 18ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இடைவிடாமல் மாறி வரும் சூழல் யூரோ பகுதியின் நாணயக் கொள்கைக்குப் பெரும் அறைக்கூவல் கொண்டு வரப்பட்டுள்ளது. பணவீக்கம் மீதான எதிர்பார்ப்பை நெருக்கமாக கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும். பணவீக்க விகிதத்தை இடைக்கால இலக்கிற்குத் திரும்பச் செய்ய, ஐரோப்பிய மத்திய வங்கி முக்கிய வட்டி வகிதத்தைத் தொடர்ந்து அதிகரிக்கவுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தூய்மையான எரிசக்தி மற்றும் மேலும் எண்ணியல்மயமாக்கல் மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட பொருளாதார அமைப்பு முறைக்கு மாறுவது ஐரோப்பாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த துறைகளில் முதலீட்டைப் பெரிதும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.