மலேசிய நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியானது
2022-11-20 18:39:11

மலேசியாவில் 19ஆம் நாள் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இந்நிலைமையில் அந்நாட்டின் கட்சிக் கூட்டணிகள் பேச்சுவார்த்தை நடத்தி அதன் முடிவின் படி  மலேசிய அமைச்சரவை எப்படி உருவாக்குவது என்பது குறித்து தீர்மானிக்கவுள்ளது.

மலேசிய நாடாளுமன்றம் அந்நாட்டின் மிக உயரமான சட்டமியற்றல் அமைப்பாகும். அது கீழ் அவை மற்றும் மேல் அவையால் உருவாக்கப்பட்டது. கீழ் அவையில் மொத்தம் 222 இருக்கைகள் உள்ளன. மேல் அவையில் 70 இருக்கைகள் உள்ளன. வழக்கமாக கீழ் அவையில் பெரும்பான்மையான இருக்கைகளை வென்ற கட்சி அல்லது கட்சிக் கூட்டணி அமைச்சரவையை அமைக்க முடிகிறது.