அமெரிக்க அறிவியல் தொழில் நுட்ப தொழில் நிறுவனங்களின் பணி நீக்கம்
2022-11-20 18:28:55

அமெரிக்காவின் உயர் அறிவியல் தொழில் நுட்ப தொழில், சுமார் 20ஆண்டுகளாக விரைவாக வளர்ந்து வந்துள்ளது. ஆனால், 2022ஆம் ஆண்டில் இந்த வளர்ச்சி போக்கு நின்றுள்ளது. தற்போது பல உயர் தொழில் நுட்ப நிறுவனங்களின் சாதனைகள் வீழ்ச்சி அடைந்து, பங்குவிலை பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. இத்தொழிலில் ஆயிரக்கணக்கான பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

வெளிப்புற சூழலின் பாதிப்பு, வளர்ச்சி எதிர்காலம் மீது கடும் தவறான தீர்ப்பு ஆகியவை, இந்த நிறுவனங்கள் பெருமளவில் பணநீக்கம் செய்ததன் காரணங்களாகும் என்று இத்தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் க்ரஞ்ச்பேஸ் வெளியிட்ட தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் நவம்பர் நடுப்பகுதிக்கு வரை, அமெரிக்காவின் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்களில், 67ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுட்டனர். பணி நீக்கம் அறிவிக்காத தொழில் நிறுவனங்கள், ஆள்சேர்க்கையை நிறுத்தியுள்ளது அல்லது சேர்க்கை எண்ணிக்கையைக் குறைத்துள்ளன.