சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் வெளிநாட்டுப் பயணம்
2022-11-20 16:13:34

நவம்பர் 14 முதல் 19ஆம் நாள் வரை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு மற்றும் தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்ற அதேவேளையில் தாய்லாந்திலும் பயணம் மேற்கொண்டார்.

இந்த 6 நாள் பயணத்தில், பலதரப்பு மற்றும் இரு தரப்பு ரீதியிலான 30க்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் ஷிச்சின்பிங் கலந்து கொண்டபோது, சீனவின் ஒலியை எழுப்பி, சீனத் தீர்வுத் திட்டத்தைப் பகிர்ந்து கொண்டதோடு, மனிதகுலத்திற்கு பகிரப்பட்டக் கூடிய எதிர்காலம் கொண்ட சமூகம் என்ற கண்ணோட்டத்துடன் பல்வேறு நாடுகள் செயல்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.