நேபாள கூட்டாட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை மற்றும் மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல் 20ஆம் நாள் வாக்குப்பதிவு
2022-11-20 16:35:49

நேபாள கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை மற்றும் 7 மாநிலச் சட்டப் பேரவைகளின் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 20ஆம் நாள் நடைபெற்றது. வாக்கெடுப்பு தடையின்றி நடைபெற்றுள்ளதாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையத்தின் துணை செய்தித் தொடர்பாளர் சுரிய ஆர்யால் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

கூட்டாட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின் 275 பிரதிநிதிகளும், 7 மாநிலச் சட்டப் பேரவைகளின் 550 பிரதிநிதிகளும் இத்தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேபாள காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணியும், அந்நாட்டின் மிகப் பெரிய எதிர் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) முறையே பிற கட்சிகளுடன் இணைந்து இத்தேர்தலில் பங்கேற்றியுள்ளன.