ஜப்பானில் உள்துறை அமைச்சர் மாற்றம்
2022-11-21 15:47:15

நிதி தொடர்பான ஊழல்,  அமைச்சரவைக்கு குறைந்து வரும் ஆதரவு உள்ளிட்ட காரணங்களால் ஜப்பான் உள்துறை அமைச்சர் மினோரு தெராடாவைத் தலைமை அமைச்சர் பியூமியோ கிஷிடா ஞாயிற்றுக்கிழமை பதவி நீக்கம் செய்தார்.

ஜப்பானில் கடந்த ஒரு திங்களில் பதவி நீக்கப்பட்ட 3ஆவது அமைச்சர் அவராவார்.

தேர்தல் தொடர்பான விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் அமைச்சரான அவர் பொறுப்பு ஏற்றிருந்தார். மேலும் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சிக்குள் தலைமை அமைச்சர் கிஷிதாவின் உட்கட்சிக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கீழ் அவைத் தேர்தலுடன் தொடர்புடைய 10 இலட்சம் ஜப்பானிய யென் (சுமார் 7,000 அமெரிக்க டாலர்கள்) "தவறான முறையில்" செலவு செய்ததாக மினோரு தெராடா மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவரின் பதவி நீக்கத்துக்குப் பின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் டக்காஎகி மசுமொடோ திங்கள்கிழமை புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.