சொந்த நாட்டின் அமைதி அணு ஆற்றல் திட்டத்தில் ஊன்றி நிற்கும் ஈரான்
2022-11-21 10:02:44

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் செயற்குழுக் கூட்டத்தில் முன்வைத்த ஈரானுக்கு எதிரான தீர்மானம், அரசியல் நோக்கத்துடன் ஈரானின் மீது நிர்ப்பந்தம் திணிக்கும் செயலாகும்.

ஈரான், நிர்ப்பந்தத்துக்கு அடிபணியாமல், நாட்டின் தேவைக்கிணங்க, சர்வதேச விதிகளின் கீழுள்ள உரிமை மற்றும் கடப்பாட்டைப் பின்பற்றி, தொடர்ந்து ஈரானின் அமைதி அணு ஆற்றல் திட்டத்தைச் செயல்படுத்தும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கனானி 20ஆம் நாள் தெரிவித்தார்.

மேலை நாடுகள், கடப்பாட்டைப் பின்பற்றி, அரசியல் நிர்பந்தத்தை நிறுத்தும் வரை, அவற்றின் செயல்களுக்கு ஈரான் பதில் நடவடிக்கை எடுக்கும் என்றும் கனானி வலியுறுத்தினார்.