ஆசிய-பசிபிக் பொது எதிர்காலத்துக்கு சீனாவின் பங்கு
2022-11-21 09:57:28

எபெக் அமைப்புத் தலைவரகளின் 29ஆவது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் 19ஆம் நாள் தாய்லாந்தில் நிறைவடைந்தது.

ஆசிய-பசிபிக் பொது எதிர்காலத்தின் கட்டுமானம், பிராந்திய பொருளாதார ஒருமைப்பாட்டின் மேம்பாடு ஆகியவை பற்றி சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த முக்கிய கருத்துக்களும் முன்மொழிவுகளும் இக்கூட்டத்தின் சாதனை ஆவணங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. ஷிச்சின்பிங்கின் கருத்துக்கள் உலக மேலாண்மைத் துறையில் ஆசியாவின் பங்கிற்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளன என்றும் பொது அறைகூவல்களைச் சமாளிக்கும் விதம் பல்வேறு தரப்புகளை ஒன்றிணைக்கும் தலைமை ஆற்றலாகச் சீனா மாறியுள்ளது என்றும் பன்னாடுகளின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இக்கூட்டத்தில் ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பை முன்னேற்றுவது பற்றி அமைதி, நிதானம், கூட்டு செழுமை, பசுமை, ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்தல் ஆகிய தன்மை வாய்ந்த எதிர்காலத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 கருத்துக்களை ஷிச்சின்பிங் விவரித்தார்.

இந்தக் கருத்துக்கள் இப்பிராந்திய மக்களின் பொது விருப்பத்தை வெளிப்படுத்தி, ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பை சீராக மேற்கொள்வதற்குத் துணை புரியும் என்றும் ஒரு பெரிய நாடான சீனாவின் பொறுப்பையும் பங்கையும் காட்டுகின்றது என்றும் தென்கிழக்காசிய நாடுகளின் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் வெளிநாட்டுத் திறப்பில் ஊன்றி நிற்கும் சீனா தனது வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வது ஆசிய-பசிபிக் நாடுகளின் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.

சீனாவின் வளர்ச்சியை ஆசிய-பசிபிக்கின் வளர்ச்சியிலிருந்து பிரிக்க முடியாது. ஆசிய-பசிபிக்கின் செழுமை சீனாவின் வளர்ச்சியிலிருந்து நன்மை பயக்கும். நவீன வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் சீனா ஆசிய-பசிபிக் மற்றும் உலகிற்கு மேலதிக வாய்ப்புகளைக் கொண்டு வரும் எனக் கருதப்படுகிறது.