6ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சியில் 169 திட்டப்பணிகள் கையொப்பம்
2022-11-21 10:11:08

6ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சி மற்றும் 26ஆவது சீனா குன்மிங் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சியில் 20 ஆம் நாள் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புத் திட்டத்தின் கையெழுத்திடும் விழா நடைபெற்றது. 169 முதலீட்டு ஒப்பந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் மொத்த முதலீட்டுத் தொகை, 40 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட யுவானாகும்.

இந்த ஒப்பந்தங்கள் யுன்னான் மாநிலத்தின் 12 முக்கிய தொழிற்துறைகளுடன் தொடர்புடையன. அவற்றில் 39 பசுமை ஆற்றல் திட்டங்களும் 29 பீடபூமி சிறப்பியல்புடைய நவீன விவசாய திட்டங்களும் அடக்கம்.