2023ஆம் ஆண்டு ஆசிய பொருளாதார வளர்ச்சி எதிர்காலம் சிறந்தது
2022-11-21 18:41:44

”சிங்கப்பூரின் பிசினிஸ் டைம்ஸ்” செய்திஏட்டின் இணையத்தளத்தில், 2023ஆம் ஆண்டு ஆசிய பொருளாதாரத்தின் வளர்ச்சி எதிர்காலம் சிறந்தது என்ற கட்டுரை வெளியானது.

இதில் கூறுகையில், 2022ஆம் ஆண்டில், பல்வேறு துறைகளில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆசியா நன்கு எதிர்கொண்டு குறைத்து வருகிறது. வேறு பிரதேசங்களை விட ஆசியாவின் பணவீக்கம் குறைவாக உள்ளது. பொருளாதார அதிகரிப்பு வேகம் குறைவது மிதமானதாக உள்ளது என்றும், 2023ஆம் ஆண்டில் ஆசியாவின் பணவீக்கம் விரைவாக குறைந்து, பொருளாதார அதிகரிப்பு விகிதம் வேறு பிரதேசங்களைத் தாண்டக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, ஆசிய பொருளாதார வளர்ச்சி, 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்த 3.6சதவீதத்திலிருந்து, 2023ஆம் ஆண்டின் பிற்பாதியில்5சதவீதமாக உயரக் கூடும். 2017முதல் 2018ஆம் ஆண்டு வரை இருந்த நிலைக்குத் திரும்பி, ஆசிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.